Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் இன்று (01) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் அளவு தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், உணவகம் முழுமையாக தீக்கிரையாகி எரிந்து சேதமடைந்த பின்னரே கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தாமதமான செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பாரிய வர்த்தக மையமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் வகையில், தீயணைப்புப் பிரிவின் செயல்திறனை மேம்படுத்த உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்களும் வர்த்தகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு