Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்ற ஆளுநர் உத்தரவு

வடக்கில் சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்ற ஆளுநர் உத்தரவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று காலை (28) , வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு இந்த விடயங்கள் அனைத்தும் சீராக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளம் வடிந்தோடிய பின்னர் கிணறுகளுக்கு குளோரின் இடுவதற்குரிய ஆயத்தங்கள் சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நோய் நிலைமைகள் தொடர்பில் கண்காணிப்பதற்குரிய ஏற்பாடுகளும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரியப்படுத்தினார்.

தொடர் மழை காரணமாக பெருமளவு பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும், வெள்ளம் இன்னமும் வழிந்தோடாமல் இருப்பதால் பயிர் அழிவு தொடர்பில் சரியான மதிப்பீட்டை தற்போது முன்னெடுக்க முடியாது இருப்பதாகவும் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Tags: Srilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மாவீரர் தினத்தைப் போன்று ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும்; பொதுஜன பெரமுன

மாவீரர் தினத்தைப் போன்று ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும்; பொதுஜன பெரமுன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.