நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக நாட்டின் பல சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அமைதியின்மை மற்றும் கலவரச் சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








