பல்லன்சேன சிறைச்சாலையில் இன்று (07) ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள், மேலதிக சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF), கலகமடக்கும் பிரிவினர் மற்றும் விமானப்படையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சிறைச்சாலையின் முழுமையான கட்டுப்பாட்டையும் சிறைச்சாலைத் திணைக்களம் மீண்டும் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







