நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று (06) 27,054 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, குற்றங்களுடன் நேரடித் தொடர்பு உடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 20 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 142 பேரும் இவர்களில் அடங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இது தவிர, போதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 65 பேரும், அவதானக் குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 122 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.







