Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள முன்னாள் எம்.பி ஜனா

தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள முன்னாள் எம்.பி ஜனா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம், சமத்துவமானவர்கள் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி யினருக்கு முடியுமாக இருந்தால் இந்த நாட்டிலே பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமயை இந்த நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள். உங்களால் இயலுமென்றால் முதலில் அதைச் செய்து காட்டுங்கள் அதன் பின் இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்று கூறுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா சவால் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (02) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை வகுப்பதாக ஜே.வி.பி இன் செயலாளர் ரின்வின் சில்வா ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறும் ரின்வின் சில்வா ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் 13வது திருத்தச் சட்டமானது 1987ம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு விடயம். அவ்வாறிருக்கையில் அது இலங்கை மக்களின் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என எவ்வாறு சொல்ல முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஜே.வி.பி இனர் என்பது உண்மைதான். இதை மறந்து தற்போது எமது மக்கள் கனிசமாக ஜே.வி பி ஐ ஆதரித்திருக்கின்றார்கள். ஆனால், இந்த 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்தால் எமது மக்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தேசிய அரசியலுக்குள் வந்திருப்பார்கள் என்பதையும் ரின்வின் சில்வா விளங்கிக்கொள்ள வேண்டும்.

1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு கொடுவரப்பட்டதில் இருந்து தற்போது வரை 22 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 13வது திருத்தச் சட்டம் மாத்திரமே இன்னமும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பி யினரே 2006லே இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தும் வைத்தனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களின் போது கூட ஜே.வி.பி யினால் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை. ஜே.வி.பியை பொறுத்த மட்டில் ஜனாதிபதி, அமைச்சர்களின் கருத்தை விட கட்சியின் செயலாளரின் கருத்தே முதன்மையாக இருக்கும். எனவே அவரின் கருத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.

13வது திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு முழுமையான தீர்வு இல்லை என்பதே எங்கள் போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடகவும் இருக்கின்றது. ஆனால் தமிழர்களின் தீர்வு விடயத்தில் இது ஒரு முதற் புள்ளி என்பதே எங்களது கருத்து.

ஆனால் இன்று 13வது திருத்தம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்று கூறும் ஜே.வி.பி யினர் இதுவரையில் தமிழர்களின் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என்று எதனையும் சொல்லுவதாக இல்லை.

இலங்கையில் அனைவரும் சமம், அனைவரும் சமத்துவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வினைக் கொண்டுவரப் போகின்றோம், 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள், அதனை இல்லாமல் ஆக்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் தமிழர்களின் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வினைத் தரப்போகின்றோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்போம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கியவர்கள் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி ஆன பின்பும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் முடிந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாக 159 ஆசங்களை மக்கள் வழங்கியிருந்தும் இன்றும் மூன்று தமிழர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று தமிழர்களைக் கைது செய்திருக்கின்றார்கள்.

தற்போது வரையில் அனைவரும் சமம் என்று கூறுபவர்கள் வடகிழக்கைச் சார்ந்த தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ அவர்களது அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. வடகிழக்கில் தமிழர்கள் மாத்திரம் எழுவர் அவர்களின் கட்சியிலே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் இரண்டு தமிழர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கலாம் ஆனால் அவர்கள் வடகிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் கிடையாது. இனவாத ரீதியாக தமிழர்களையும், முஸ்லிம்களையும் புறக்கணிக்கின்றீர்கள் என்பதை நடைமுறை ரீதியிலே காட்டிக்கொண்டு அனைவரும் ஒன்றாக வாழவேண்டும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாய் வார்த்தையில் மாத்திரம் கூறிக்கொள்கின்றீர்கள்.

இந்த தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி க்கு நான் ஒரு சவால் விடுகின்றேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம் என்று கூறும் நீங்கள் இந்த நாட்டிலே பௌத்த மதத்திற்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரிமயை இந்த நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள். உங்களால் இயலுமென்றால் முதலில் அதைச் செய்து காட்டுங்கள் அதன் பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்று கூறுங்கள் என்று தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!
செய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!

June 19, 2026
அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு
செய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

June 19, 2026
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை
செய்திகள்

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

June 19, 2026
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
Next Post
இலங்கைக்கு புதிய பெண் பிரதம நீதியரசர் நியமனம்

இலங்கைக்கு புதிய பெண் பிரதம நீதியரசர் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.