Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிங்களவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்கு நீதி கோரி கத்தோலிக்க அருட்தந்தையர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை குற்றங்கள் நிறைந்த இராச்சியம், இங்கு யுத்தக்குற்றங்களும், இனவழிப்பும் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச அரங்குக்கு காண்பிக்கும் செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகிறது.

இந்த நாட்டில் வரி செலுத்துவதில் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளார்கள். சிங்களவர்களின் வரிப்பணத்தைக் கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளை இந்த அரசாங்கம் வந்தததன் பின்னர் தீவிரப்படுத்தியுள்ளது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அரச நிறுவனமாக காணப்பட்டாலும் அது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறது. புலிகள் அமைப்பால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிங்கள பொலிஸார், சிங்கள மக்கள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரிகளை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இனப்படுகொலையும், யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றதாக சர்வதேசத்தக்கு காண்பிக்கும் போக்கு காணப்படுகிறது என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
Next Post
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு