Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு மற்றும் கிழக்கில் மழையுடனான வானிலை; தாழ் அமுக்கம் தொடர்பில் தகவல்

வடக்கு மற்றும் கிழக்கில் மழையுடனான வானிலை; தாழ் அமுக்கம் தொடர்பில் தகவல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் நாளை மறுதினமளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கைக்கு அப்பால் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

இதேவேளை இந்த நிலைமையுடன் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலையும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது.

ஆனபடியினால் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: Srilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க அச்சம் கொள்ளத்தேவையில்லை; புள்ளிவிபரத் திணைக்களம்

கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க அச்சம் கொள்ளத்தேவையில்லை; புள்ளிவிபரத் திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு