இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இந்த ஆண்டு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னதாக, தான் அரசாங்கத்துடன் இணைந்த தொழிற்சங்கத்தை வழிநடத்துவதாகவும் எனவே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் கொடுப்பனவு பெற வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை தனது ஊழியர்களுக்கான எந்தவொரு போனஸையும் இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை.
அடுத்த வருடத்தின் முதல் பாதியில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் இலங்கை மின்சார சபை நிராகரித்துள்ளது.
இந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, அடுத்த வருடம் அதிகரிக்கக் கூடிய ஒரு பில்லியன் மின்சார அலகுகளின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்வதற்கு குறைந்த செலவில் எரிசக்தி ஆதாரங்கள் இல்லாததே இதற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி செலவில் இருந்து வருகிறது என மின்சார சபை சீர்திருத்த செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.
இக்குறைபாட்டுக்கான ஒரே மாற்று வழி, காற்று மற்றும் சூரிய சக்தியுடன் ஒரு மேலதிக எரிபொருளாக (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவை (LNG) பயன்படுத்துவதே ஆகுமென அவர் கூறினார்.