Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காண்பது அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பபில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிக அளவு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களாக வீடுகள், அரச மற்றும் அரச சாரா திணைக்களங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே இந்த அபாயகரமான சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை போதிய கவனத்தை செலுத்தி , டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழல் அற்ற இடமாக வைத்திருக்குமாறும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில், எலி காய்ச்சல் அபாயம் இருப்பதனால் விவசாயிகளும் வயல் நிலங்களை அண்டி வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், காய்ச்சல் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அது மட்டுமல்லாது இது பண்டிகை காலம் என்பதனால் பொது போக்குவரத்தில் பிரயாணத்தில் ஈடுபடும் பயணிகள் உணவு உண்பதற்காக நிறுத்தப்படும் உணவு சாலைகளில் தமக்கு தரமான உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எமக்கு அறிவிக்குமிடத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு