Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட தாழமுக்கமாக வலுவடையக்கூடும். இந்த தாழமுக்கமானது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் அடுத்துவரும் இரு தினங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்வதோடு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சிரமதானம்!
காணொளிகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம்!

July 30, 2026
பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணொளிகள்

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

July 30, 2026
நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!
செய்திகள்

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

July 30, 2026
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!

July 30, 2026
யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!
செய்திகள்

யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!

July 30, 2026
Next Post
எவரையும் நீக்க முடிவில்லை- நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர்; சிறிநேசன்

எவரையும் நீக்க முடிவில்லை- நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர்; சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.