அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரைதீவு பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







