அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.போடர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியின் 3வது ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்
பும்ரா டெஸ்ட் இனிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 12-வது முறையாகும். அதே சமயம் ஆசிய கண்டத்துக்கு வெளியே அவர் இனிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10-வது நிகழ்வாகும்.
இதற்கு முன்பு இந்திய பந்துவீச்சாளர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்தசாதனையை தற்போது பும்ரா முறியடித்தார்.