பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (19) உத்தரவிட்டார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எம்.பி, இன்று காலை 9 மணியளவில் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது பிணை மனுவை பரிசீலித்த பிறகு இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டது.