பாலமுனை புதிய பாலமுனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாசல் உண்டியல் களவாடப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பள்ளி வாசலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் உண்டியலை திருடுவது சி.சி.ரி.வி.காணொளியில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.