13 வயதுக்குட்பட்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை ஸாஹிரா கல்லூரி அணிக்கும், அம்பாறை சத்தாதிஸ்ஸ அணிகளுக்கிடையில் உஹன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சத்தாதிஸ்ஸ அணி 42 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனை எதிர்கொண்ட ஸாஹிரா கல்லூரி அணியினர் 20 வது ஓவரில் 8 விக்கெட்டினை இழந்து 83 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
டிக்லயார் செய்து எதிர் அணிக்கு தொடர்ந்தும் சத்தாதிஸ்ஸ அணி இரண்டாவது இன்னிங்சில் 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை விட்டுக்கொடுத்து போட்டியை டிக்லயார் செய்தது.
தொடர்ந்து ஸாஹிரா கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிய போது 1 விக்கெட் இழப்பிற்கு 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை போட்டி நிறைவடைந்ததுடன் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி வெற்றியீட்டியது.
இதில் கல்முனை ஸாஹிரா அணியில் விளையாடிய இல்ஹாம் உமர் இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அஹ்திர் 23 ஓட்டங்கள், அதீப் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 19 ஓட்டங்களும் பெற்றிருந்தார்கள்.
இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த பாடசாலையின் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எம்.தன்ஸீல், மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கிய பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஏ.எம். ஜப்ரான், எம்.யூ.எஸ். ஷம்லி, ஆலோசனை வழங்கிய ஆசிரியர் எம்.ஐ.அமீர் மற்றும் திறமையாக விளையாடிய மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை முதல்வர் எம்.ஐ. ஜாபீர் தெரிவித்தார்.