Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாகன சந்தையை முறையாக திறக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதன்படி, வாகனச் சந்தை மூன்று வகைகளில் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்காக டிசம்பர் 14 ஆம் திகதி முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பொருட்களை கொண்டு செல்வதற்கும் தனிப்பட்ட பாவனைக்காகவும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது 2025 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது நாட்டில் டொலர் நெருக்கடி உருவாகும் என எந்தவொரு தரப்பினரும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

அதேசமயம் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது முதலாவது வாகனத் தொகையை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், வாகனங்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நடவடிக்கைகளை முன்னைய அரசாங்கம் மேற்கொண்டது.

எனினும், பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாலும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதாலும், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி பல கட்டங்களாக வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்கமைய சுற்றுலாத்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய முதல் அனுமதி வழங்கப்பட்டது.

அந்த முடிவின் பின்னர், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது முதல் வாகனத் தொகையை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு