Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைத் தமிழரசுக்கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை; சி.வி.கே. சிவஞானம் சந்தேசகம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை; சி.வி.கே. சிவஞானம் சந்தேசகம்

2 years ago
in அரசியல், செய்திகள்

இலங்கைத் தமிழரசுக்கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவரும், வடமாகாண தவிசாளருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளதோடு, கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரையில் தாக்கல் அதுகுறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக்கட்சி 75ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாகும். தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியானது தற்போதும் அந்தப் பயணத்தில் தீவிரமாக உள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையான நோக்கமானது, கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரம்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

இதற்கு காரணங்கள் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தற்போது தமிழ் மக்களின் அதிகளவான பிரதிநிதித்துவங்களை கொண்டுள்ள கட்சியாகும். தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தான் தங்களின் இலக்கினை அடைய முடியும்.

ஆகவே, இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட எட்டு ஆனங்களை வடக்கு,கிழக்கில் வென்றெடுத்து தனது செல்வாக்கினை நிரூபித்துள்ள தமிழரசுக்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கட்சிக்குள் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முனையும் தரப்புக்கள் பாரிய சதிவலையொன்றை பின்னியிருக்கின்றார்கள். இந்த விடயத்தினை கட்சியின் ஒவ்வொறு உறுப்பினரும் புரிந்து கொள்ளுதல் அவசியமானது.

திரைமறைவில் மேற்கொள்ளப்படும் தமிழ்த் தேசிய எதிர்ப்பு சக்திகளின் சதிவலையை முறியடிப்பதற்கும், கட்சியை சிறப்பாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அனைத்து உறுப்பினர்களும் முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டியது அவசியமாகின்றது.

அத்துடன், நீதிமன்றத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை முறையாக கையாண்டு கட்சியை நீதிமன்றத்திலிருந்து விடுவிக்க வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்; விதிக்கப்படப்போகும் அபராதம்

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்; விதிக்கப்படப்போகும் அபராதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு