Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே 2025 ஆம் ஆண்டு பிரதான வேலைத்திட்டமாக கிராமிய பொருளாதாரங்களை வளர்ச்சிக்கான பணிகள் முன்னெடுப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

வீழ்ச்சி அடைந்த பொருளாதார முறைமைக்கு எதிராக புதியதொரு பொருளாதார கொள்கையை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக மக்களின் கருத்துகளை அறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அலுவலகம் நேற்று (22) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுரின் பிரத்தியேக செயலாளர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய அமைச்சர், மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை தளத்தை எங்களுக்கு தந்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டு மக்கள் முக்கியமான ஒரு வரத்தை எங்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள், கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்காக எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி உட்பட அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நாங்களும் மக்கள் வழங்கிய வர பிரசாதத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இந்த மக்கள் வரமானது இனவாதத்திற்கு எதிராக வழங்கப்பட்ட மக்கள் வரம். மக்கள் வழங்கிய இந்த ஆணை ஊழலுக்கு எதிராக வழங்கிய ஆணை. உலக நாடுகள் மத்தியில் எமது நாட்டிற்கு ஏற்பட்ட அசோகரிகளை தடுப்பதற்காக மக்கள் வழங்கியது இந்த ஆணை.

உங்களுக்கு தெரியும் நாங்கள் அனைவரும் கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கினோம். எங்களுக்கு கிடைக்கப்பெற்றது ஒரு பொருளாதார வீழ்ச்சி அடைந்த நாடு. மக்களுக்கு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்த நாட்டையே எங்களுக்கு கையளித்தார்கள்.

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருக்கின்ற கடதாசி உற்பத்தி சாலை உட்பட இந்த நாட்டில் இருக்கின்ற தொழிற்சாலைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்ற ஒரு ஊழல் நிறைந்த ஆட்சியை தான் எங்களிடம் கையளித்தார்கள்.

நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் மக்களின் அயராத உழைப்பும் அயராத தியாகத்தின் காரணமாக தற்போது பொருளாதாரத்தில் நாங்கள் அபிவிருத்தியை நோக்கி செல்லக்கூடிய விதத்தில் இருக்கின்றோம்.

பிச் ரேட்டிங் நிறுவனத்தின் மூலம் இந்த நாடு வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி ரீதியாக முன்னோக்கிச் செல்லுகின்ற நாடு என்கின்ற வகையிலும் அவர்கள் எங்களை அங்கீகரித்திருக்கின்றார்கள்.

பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்து இருக்கின்றோம் என கூறிய எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை மழுங்கடிக்க கூடிய வகையில் தற்போது பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகின்றோம் என்பதனை தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது.

சர்வதேச ரீதியாக எந்த அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே 2025 ஆம் ஆண்டு பிரதான வேலையாக இருக்கின்றது கிராமிய மட்ட கிராமிய பொருளாதாரங்களை வளர்ச்சி செய்வது எமது பிரதான வேலை திட்டமாக காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தால் கிராமிய மட்டத்தில் சுவையான ஒதுக்கீடுகளை செய்த போதும் கிராமிய மட்டத்தில் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகள் தீர்வதாக இல்லை அவர்களுக்கு இந்த ஒதுக்கீடு போய் சேராத காரணமாக காணப்படுகிறது இதனால் மக்களின் ஏழ்மைத்தனம் வேலை இல்லாத பிரச்சனை மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள் ஆகவே அந்த பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்ததாக எங்களுக்கு தெரியவில்லை.

ஆகவே வீழ்ச்சி அடைந்த பொருளாதார முறைமைக்கு எதிராக புதியதொரு பொருளாதார கொள்கையை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம். அதில் முக்கியமாக காரணமாக இருப்பது மக்களின் கருத்துக்கள் இந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கான அலுவலகங்கள் தேவைப்படுகின்றது. அதனால் தான் இவ்வாறான காரியங்கள் திறக்கப்படுவது மக்களுக்கு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான்.

தேர்தல் காலங்களில் வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிழமையும் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம்.

ஒரு சாராரி குடிமகனின் பிரச்சினைகளை கேட்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல. உயர்தரத்தில் அனைத்து மக்களின் பிரச்சினைகளை கேட்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம்.

இந்த காரியாலயம் திறக்கப்பட்டு இருப்பது பிரபு அவர்கள் சார்ந்தவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாத்திரமல்ல, அனைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த காரியாலயம் செயற்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்ச்சியாக நாங்கள் 2025 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா வேலை திட்டம் டிஜிட்டல் மயமாக்கல் வேலை திட்டம் அதே போன்று கிராமிய மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற வேலை திட்டங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக செய்வோம் ஒவ்வொரு வேலை திட்டங்களிலும் எங்களோடு இணைந்து கொள்ளும்படி அனைவரையும் அழைப்பு விடுக்கின்றோம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
செய்திகள்

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

July 7, 2026
மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,800 பேரை வேலைநீக்கம் செய்தது
செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,800 பேரை வேலைநீக்கம் செய்தது

July 7, 2026
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு
செய்திகள்

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு

July 7, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்
செய்திகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

July 7, 2026
மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
செய்திகள்

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

July 7, 2026
Next Post
சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் பெற்றேன்- குற்றமென்றால் தூக்கிலிடுங்கள்; விமலவீர திஸாநாயக்க

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் பெற்றேன்- குற்றமென்றால் தூக்கிலிடுங்கள்; விமலவீர திஸாநாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.