மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதத்தினரான 4,800 பேரின் வேலைகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் அதிக எண்ணிக்கையிலான பணி நீக்கங்கள் எக்ஸ்பொக்ஸ் (Xbox) பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Xbox-இல் மேற்கொள்ளப்படும் இந்த விரிவான ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம், 1,600-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உடனடியாக நீக்கப்படவுள்ளன.
தனது Xbox கேமிங் பிரிவில் பல ஆண்டுகளாக மேற்கொண்ட பெரும் முதலீடுகளுக்குப் பின்னர் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அப்பிரிவை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் குறித்து Xbox-இன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ஆஷா சர்மா, ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில், “Xbox-இன் வரலாற்றிலேயே மிக முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
‘X’ தளத்தில் பகிரப்பட்ட அந்தக்குறிப்பில், வரும் ஆண்டில் மேலும் 1,600 வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் என்றும் சர்மா குறிப்பிட்டுள்ளார்.








