Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்லில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எச்சரித்த காணி உரிமையாளர்

யாழ்லில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எச்சரித்த காணி உரிமையாளர்

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.

இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என அவர் பகிரங்க அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளார்.

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வட பிராந்திய சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகியும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் ஈடுபட்டும், மனுக்களை கொடுத்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.

தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் இதனை வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்த்துள்ளோம்.

முப்படையினரின் அபகரிப்புக்கு அடுத்தபடியாக மதத்தின் பெயராலும் காணி அபகரிக்கப்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமான 150 பரப்புக் காணியை ஆக்கிரமித்து, மொரட்டுவ பல்கலைக்கழக கட்டடக்கலை நிபுணர் ஒருவர் பௌத்த தூபி ஒன்றை நிறுவியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நாம் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், முப்படைப் பாதுகாப்புடன் அங்கு பூஜைகள் நடக்கின்றன.

மிக விரைவாக எங்களுடைய காணிகள் எங்களுக்கு வேண்டும். நாட்டினுடைய பொருளாதாரத்தில் விவசாயம், கடற்றொழில் ஊடாக மிகப்பெரும் பங்காற்றிய வலிகாமம் வடக்கு மண்ணை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தால், மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள்.

காணிகளை மீட்பதற்காக எந்த நிலைக்கும் கீழிறங்க நாங்கள் தயாராக உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் காணி உறுதிகளுடன் காணிகளுக்குள் நுழைவோம். எம்மோடு அனைத்துத் தரப்பினரும் வரவேண்டும்.” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு