Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

3 months ago
in செய்திகள்

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 120 பந்தயப் புறாக்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரொன்றை சோதனையிட்டபோது, ஆறு இரும்புக் கூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 பந்தயப் புறாக்களை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, காருடன் புறாக்களையும் கைப்பற்றிய பொலிஸார், மதுரை பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், பந்தயப் புறாக்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாட்டுப் படகு ஒன்று பொலிஸாரைக் கண்டதும் கடலுக்குள் தப்பிச் சென்றதாகவும், அதனைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடல் வழியாக பந்தயப் புறாக்களை கடத்த முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு