Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் பாவனையை தடுக்க பொதுமக்களின் உதவியும் அவசியம்; அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பண்டார

போதைப்பொருள் பாவனையை தடுக்க பொதுமக்களின் உதவியும் அவசியம்; அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பண்டார

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை என அம்பாறை அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பி. பண்டார தெரிவித்தார்.

காரைதீவு பொலிஸ் பிரிவிற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழு கூட்டம் நேற்றையதினம்(26) மாலை காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் பாதுகாப்பு உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு வலுப்பெறும் சமூகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம்.

அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பொலிசார் கடமையாற்றி வருகின்றனர்.

எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100 வீதம் சாத்தியமாகாது.

எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியானது. அத்துடன் உபதேச குழுவின் வகிபாகம் பாரியது. அதன் அதிகாரம் வரையறையற்றது. முழுப் பொலிஸ் நிலையத்தை கண்காணிக்க முடியும்.

நான் திருக்கோவிலில் இருந்தபோது அங்குள்ள மக்கள் பாதுகாப்பு உபதேசகுழுவே என்னை காப்பாற்றியது.

சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் இப்பிரதேசத்தில் முற்றாக தடை செய்யவேண்டும்.

தங்கள் உயிர்ப் பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமை உணர்வுடன் எமது கடமையினை செய்கிறோம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
களுத்துறை சிறையில் இருந்த ரஷ்ய தாய் மற்றும் மகள் விடுதலை

களுத்துறை சிறையில் இருந்த ரஷ்ய தாய் மற்றும் மகள் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு