Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று ரன்விமன வீடுகள் பயனாளிகளிடம் கடந்த (06) கையளிக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி திணைக்களத்தினால் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலும் பல்வேறு சமூக நலத்திட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் பிரதேச சமுர்த்திப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகள், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றன.

இதன்போது, பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு சிப்தொரா சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் எதிர்கால தொழில் வழிகாட்டலுக்காக நிதிச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், சமுர்த்தி வங்கியின் ஊடாக குறைந்த வட்டியில் சவிபல கடன்கள் வழங்கப்பட்டதுடன், அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்களும் வழங்கப்பட்டன.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் கொடி விற்பனை மூலம் அதிகளவு நிதியை சேகரித்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் தலைவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் கொடி விற்பனை மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் திருமதி தயானி சசிகுமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கங்காதரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி புனித நாயகி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

f
f
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு