இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் தனியார் பேருந்தொன்று இன்று (08) அதிகாலை மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீசா–பைராகர் மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.








