Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் – அரச போக்குவரத்து சபைகளுக்கிடையே கூட்டம்; முற்றுப் பெறாத நேர அட்டவனை

தனியார் – அரச போக்குவரத்து சபைகளுக்கிடையே கூட்டம்; முற்றுப் பெறாத நேர அட்டவனை

2 years ago
in செய்திகள்

தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றயதினம்(27) வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து துறைக்கும் அமைச்சர் இ.சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரன் இருந்த காலத்தில் இவ்வாறான 82 கூட்டங்கள் இரவு பகல் என ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு பின்னர் அந்த அமைச்சரால் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உருவாக்கப்பட்டது.

அதற்கு பின்னர் அந்த அதிகார சபைக்கு எத்தனையோ பொது முகாமையாளர்கள் நியமனம் பெற்று வந்தார்கள். இருந்தாலும் அவர்கள் நடாத்தும் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திலும் எத்தனையோ கூட்டங்கள் நடைபெற்றன. அதிலும் எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லை. அவருக்கு வாக்குகள் வேண்டும் என்பதற்காக இலங்கை போக்குவரத்து சபையில் இருப்பவர்களை வைத்து யூனியன் அமைத்தார்.

அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு யூனியன், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு யூனியன் என கோண்டாவில் டிப்போவில் உள்ள ஊழியர்களை வைத்து 5 அல்லது ஆறு கட்சிகள் யூனியன் அமைத்திருக்கும்.

இவ்வாறு இருக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யூனியன் செல்வதை தான் முன்னாள் அமைச்சர் ஏற்றுக் கொள்வார். வடக்கு தவிர ஏனைய எட்டு மாகாணங்களிலும் அரச – தனியார் போக்துவரத்து துறைக்கு இடையே ஒற்றுமையான நேர அட்டவணை காணப்படுகிறது.அங்கு சீரான சேவை இடம்பெறுகிறது.

ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை. கடந்த கொரோனா காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் டிப்போவில் இருந்து கோடிக்கணக்கான பணம்தான் இங்கிருந்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது.

இது பத்திரிகைகள் ஊடாக வெளிவந்த செய்தி. ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்தில் உள்ள பருத்தித்துறை, காரைநகர், கோண்டாவில் ஆகிய டிப்போக்களுக்கு பொறுப்பாக ஒருவர் இருப்பார்.

அவர் தனியார் துறையை நசுக்கி, இந்த வருமானத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என செயற்படுகின்றார்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!

September 25, 2026
தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 25, 2026
மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

September 25, 2026
கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

September 25, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கு எதிராக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கு எதிராக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு