Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவூத் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்று சவுதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள குறித்த கடிதத்தில், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உள்ளிட்டோர் அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்கவோ அல்லது அபராதத் தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யவோ நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அனோஜன் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளி எனவும், இலங்கையில் உள்ள அவரது குடும்பம் அவரது வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை அவரது பொருளாதார நிலைமையுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தண்டனைக்குள்ளான சம்பவம் தொடர்பில் அனோஜன் ஆழ்ந்த வருத்தத்தையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, சவுதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு தாங்கள் முழுமையான மதிப்பளிப்பதாகவும் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கோரிக்கை முழுமையான மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

November 9, 2026
சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!
செய்திகள்

சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!

November 9, 2026
40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை

November 9, 2026
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!
உலக செய்திகள்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!

November 9, 2026
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை

November 9, 2026
யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!
செய்திகள்

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!

November 9, 2026
Next Post
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு