Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

2 years ago
in அரசியல், செய்திகள்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை நேற்று சனிக்கிழமை(28) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழரின் அரசியலில் இந்தியா இன்று நேற்று அல்ல 1970, 60களில் இருந்தே முக்கிய காரணியாக இருந்திருக்கின்றது. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அமைச்சருக்கு மேலதிகமாக கட்டாயமாக நான் பேசுவேன். சட்டங்களை இயற்றக்கூடிய பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது.

எங்களது கடல் எல்லைகளை பாதுகாப்பது தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கான வலு தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை இருப்பதன் காரணமாக இந்த விடயம் அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து போகுமா என்பது கேள்விக்குறி.

ஆனால், யாழ்ப்பாண மீனவர்களை பொறுத்த வரைக்கும் இது ஒரு வாழ்வாதார பிரச்சனை ; இந்திய அரசாங்கத்துடன் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் கருத்துக்களை முன்வைப்பேன் ; இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதுடன் கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சரும் எம்மக்களின் வாக்குகள் மூலமே தேசியப்பட்டியல் மூலம் பாரளுமன்றம் சென்றவர்.

எனவே இப் பிரச்சனையை உனடியாக தீர்க்கவேண்டிய பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது- என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு