Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரான் பிரதேச செயலகத்திறகுட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அரசேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு பறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் கிராமசேவகருக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (30) கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இவ் போராட்டத்தில் பூலாக்காடு,பெரியவேரம்,வட்டிபோட்ட மடு,அம்புஸ்குடா,ஆனசுட்ட பொத்தானை மற்றும் பொண்டுகள்சேனை,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கு பற்றியிருந்தனர்.

கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் ஏந்திய பதாதைகளை சுமந்தபடி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக பிரதேச செயலக முன்வாயிலை வந்தடைந்தனர்.

‘தூண்டாதே.தூண்டாதே வன் முறையை தூண்டாதே ‘ நீதி வேண்டும் நீதி வேண்டும் கிராமசேவகருக்கு நீதி வேண்டும்.’ ‘நிறுத்துங்கள் நிறுத்துங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்வதை நிறுத்துங்கள்,’ ‘பொய்யான தகவல்களை வெளியிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்பன போன்ற கோஷங்களை இதன்போது எழுப்பினார்கள்.

பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் 3 கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கையளித்தனர்.

கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்டவர் உரிய நடவடிக்கைக்கைக்காக பிரதேச செயலாரிடம் கையளிப்பதாக இதன்போது தெரிவித்தார்.

தங்களது கிராமத்தில் இயங்கும் மாதர் சங்க பிரதிநிதிகள் பல வருட காலமாக இவ் அமைப்பில் இயங்கி வருவதாகவும் இவர்கள் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அரச சொத்துக்களை தாங்கள் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன் சில நாட்களாக கிராம உத்தியோகத்தரை மானபங்கப்படுத்தும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இவர்களை விசாரணைக்குட்படுத்துவதோடு, இவர்களிடமுள்ள அரச சொத்துக்களை பறிமுதல் செய்து புதிய மாதர் சங்கத்தினை அமைத்து தருவதுடன், எமது கிராம சேவகர் எவ்வித இலஞ்சம் ஊழலும் புரியாதவர் என்பதுடன் எமது கிராமத்தில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்களை எவ்வித இடையூறுமின்றி அச்சுறுத்தலின்றி கடையாற்ற வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதேசமயம் கடந்த வாரம் ‘யூ ரியுப்’ வலைத்தல நபர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்று மாதர் சங்க உறுப்பினர்களினை செவ்வி கண்டு அங்கு கடையாற்றும் கிராம சேவகருக்கு எதிரான பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இச் செயலானது பிரதேசத்தில் அமைதியின்மையும், அசாதாரண சூழ் நிலையையும் ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் அங்கு கடையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களிடையே அதிருப்தி இன்மை நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #batticaloa #npp #srilanka #viral #kiran

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.