Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு; சரத் பொன்சேகா கூறுகிறார்

மஹிந்தவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு; சரத் பொன்சேகா கூறுகிறார்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்த காலத்திலும் மஹிந்தராஜபக்ஸவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படவில்லை. பயங்கரவாதிகள் எவரும் மஹிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்யவும், குண்டுத்தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கவில்லை. இவர் தனியாக சென்றா யுத்தக் களத்தில் போரிட்டார். நாங்கள் போரிடவில்லையா,

யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவ தளபதியான எனது பாதுகாப்பு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது. அப்போது எமக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா, என்னை வெலிகடை சிறைச்சாலையில் அடைத்த போது அங்கும் விடுதலை புலிகள் அமைப்பினர் இருந்தனர்.

பயங்கரவாதிகளுடன் இருந்த எனக்கு சிறைச்சாலையில் மேலதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது என்னை படுகொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஸ் என்ற பயங்கரவாதி என் அருகில் அமர்ந்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஸவின் மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த ராஜபக்ஸ ‘பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை அனுமதிக்க போவதில்லை. யுத்தம் தீர்வல்ல என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டது.

விடுதலை புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஸ மீது வைராக்கியம் இருக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை புலிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்டது. ஆகவே மஹிந்தவுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

ட்ரோனர் கருவி ஊடாக மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பைத்தியம் கிடையாது.ஏனெனில் மிக் விமானத்தை காட்டிலும் ட்ரோனர் கருவி ஊடாக தாக்குதலுக்கு அதிக நிதி செலவாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரபுக்கள் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். ஆகவே அவருக்கு 30 பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது போதுமானதாக அமையும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!
செய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

August 21, 2026
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

August 21, 2026
மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

August 21, 2026
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!
உலக செய்திகள்

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

August 21, 2026
Next Post
மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு;8 மணித்தியால வேலைக்கு 2000

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு;8 மணித்தியால வேலைக்கு 2000

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.