Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்
ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விவகாரம் ஒன்றில் கைது செய்யப்பட்ட நிந்தவூர்
பகுதியைச் சேர்ந்த 23 வயதான சந்தேக நபர் இவ்வாறு பொலிஸ் காவலில் இருந்தபோது
உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது அம்பாறை ஆதார வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய
இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்கள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி
பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்
ஏற்கனவே உட்கொண்ட போதைப்பொருள் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது பொலிஸாரின்
கடுமையான சித்திரவதை மற்றும் தாக்குதல்களினால் இந்த மரணம் சம்பவித்ததா? என்ற இருவேறு
கோணங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், பொலிஸ் உயர்மட்டத்தினரும்
விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!

August 20, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

August 20, 2026
புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி
செய்திகள்

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

August 20, 2026
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!
செய்திகள்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

August 20, 2026
செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!
செய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

August 20, 2026
மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

August 20, 2026
Next Post
”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர

''பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை''; தயாசிரி ஜயசேகர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு