Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இன்று (06) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், சிறைச்சாலை நிர்வாகத்தின் செயலிழப்பும் அலட்சியமுமே இந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, சிறைச்சாலைகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என தெரிவித்திருந்ததை நினைவுபடுத்திய சஜித் பிரேமதாச, அதே கொள்கை தற்போதைய அரசாங்கத்திற்கும் பொருந்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த System Change தோல்வியடைந்துள்ளதாகவும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஆட்சி, சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை நிர்வாகத்தில் காணப்படும் பாரிய குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும், மனிதாபிமான அடிப்படையிலான சிறைச்சாலை நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு திறன் உள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆதரவான அறிக்கையை வழங்கக்கூடிய குழுவின் விசாரணைக்கு பதிலாக, சுயாதீனமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தற்பெருமையை கைவிட்டு, தேசிய பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை நிர்வாகம் உள்ளிட்ட நாட்டின் அவசர பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி உடனடி தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை
செய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

October 5, 2026
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
Next Post
அரிசி மற்றும் நெல்லை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தும் தடை நீக்கம்!

அரிசி மற்றும் நெல்லை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தும் தடை நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு