Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்ற பாரிய வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாகக் கண்டறிய விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோதல் எவ்வாறு உருவானது, யார் இதற்கு காரணம், எந்த நோக்கத்திற்காக திட்டமிடப்பட்டது என்பன குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த வன்முறையைத் தூண்டியோ அல்லது வழிநடத்தியோ இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு கட்டங்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான மற்றும் விரிவான விசாரணை அறிக்கை நாளைய தினத்துக்குள் வெளியிடப்படும் எனவும் நீதி அமைச்சர் உறுதியளித்தார்.

இதற்கிடையில், இன்று இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும், கைதிகள் 19 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 18 பேர் கம்பஹா, வெலிசர மற்றும் ராகம மருத்துவமனைகளுக்கும், மேலும் 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த பாரிய வன்முறையாக மாறியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இதே சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மற்றொரு மோதலிலும் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!

August 20, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

August 20, 2026
புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி
செய்திகள்

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

August 20, 2026
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!
செய்திகள்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

August 20, 2026
செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!
செய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

August 20, 2026
மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

August 20, 2026
Next Post
இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு