Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரிஜ் மார்க்கெட் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு

பிரிஜ் மார்க்கெட் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த முயற்சியாளர்களது மேசைகள் மற்றும் வியாபாரத்திற்காக களஞ்சியப்படுத்தியிருந்த பல இலட்சம் பெறுமதியான விற்பனைப் பொருட்கள் என்பன இனங்காணப்படாத நாச கார கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.

நாளாந்தம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வாறான சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்ட விபரீத நிலையினை கருத்திற் கொண்ட சமாரிற்றன் பேஸ் நிறுவனம் இவர்களுக்கு தேவைப்பாடாக இருந்த இரண்டு மேசையினையும், பாதிக்கப்பட்ட 13 வியாபாரிகளுக்கும் புதுவருட பிறப்பினை முன்னிட்டு தலா 6000/= வீதம் நிதி உதவியினையும் வழங்கி வைத்துள்ளனர்.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் சமாரிற்றன் பேஸ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் அவரது பாரியார் திருமதி.ரமணதாஸ்,
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP), மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசகர் ஞானப்பிரகாசம் பிரியவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

உதவிகளை பெற்றுக் கொண்ட குறித்த சுய தொழில் முயற்சியாளர்கள் தமக்கான உதவிகளை வழங்கிய சமாரிற்றன் பேஸ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் அவரது பாரியாரிற்கும், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரிற்கும், தமது சந்தைத் தொகுதி எரியூட்டப்பட்ட போது தமக்கு பல வழிகளிலும் உதவிய மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
இன்றைய காலநிலை மாற்றம்

இன்றைய காலநிலை மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.