முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுமார் 2 மணிநேரம் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நிதியமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் இன்றுமுன்னிலையாகியுள்ளார்.
எனினும், அவர் முன்னிலையானதற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை.