Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

2 years ago
in செய்திகள்

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை பிரதேச செயலகத்தில் இன்று (03) இடம்பெற்ற திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முத்துநகர் பகுதியில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதோடு விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். கிட்டத்தட்ட 1887 ஏக்கருக்கு க்கு மேற்பட்ட குடியிருப்பு காணியில் இவர்கள் வசித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையினர் ஒரு இரவிலேயே கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 1971ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே முத்துநகர் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கான ஆதாரங்கள் உட்பட ஆவணங்களும் மக்களிடம் இருக்கின்றன.

எனவே அவர்களுடைய காணி விடுவிப்பு தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் அக்மீமன மற்றும் அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏழை மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வெல்வெரி மக்களுடைய காணிகளையும் விடுவித்து தற்போது இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களையும் அங்கே மீளகுடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்வெரி பகுதியில் மக்கள் வாழ்ந்த வீடுகள், உடைந்த கட்டடங்கள் கிணறுகள், பலன்தரு மரங்கள் இன்னும் அங்கே இருக்கின்றன.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை வரவேண்டாம் என்று கூறிவிட்டு அந்த காணிகளை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாம் ஏனைய காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.

எனவே இவற்றையும் விடுவிக்க இந்த அவையினூடாக கோரிக்கை விடுப்பதாகவும் மக்ஹெய்சர் விளையாட்டரங்கு புணரைப்பு, திருகோணமலை வைத்தியசாலையின் பௌதீகவள பற்றாக்குறை மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
Next Post
கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு