Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

2 years ago
in செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையிலே கொழும்பில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 100 ரூபா வரி அடங்கலாக 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் சதொச ஊடாக 845 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய காய்ந்த மிளகாயை நீங்கள் எவ்வளவு தொகைக்குக் கொள்வனவு செய்கிறீர்கள் என்பது தொடர்பில் பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.

513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நெத்தலி 100 ரூபா வரி அடங்கலாக 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், நெத்தலி கிலோ கிராம் ஒன்று 960 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

146 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 211 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். பருப்பு 227 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கான வரி 25 சதம். ஆனால் என்ன நடக்கிறது. இவை அனைத்துக்குமான விலைப்பட்டியலில் தவறு காணப்படுகிறது.

ஆகவே, அரசாங்கத்தினால் இந்த நிலைமையினை நிவர்த்தி செய்ய முடியாவிடின், நாட்டை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்படும்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு