இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் புதிய நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான திட்டங்கள் (03) நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீகிரிய பிரதேசத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும். கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை டிசம்பர் மாதம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய இலக்குடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
அத்தோடு, சீகிரியாவை அண்மித்த பகுதிகளில் உள்ள உதவியாளர்களால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.