Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை

வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் க்கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று திங்கள் (6) இரவு மேற்கொள்ளப்பட்டது.

கிராம சேவகர் க.கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் பிரதேச மில்லர் விளையாட்டுக் கழக இளைஞர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது 100 லீற்றர் கசிப்பு, 30 லீற்றர் கோடா,10 வெற்று வரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு, அவற்றினை பொதுமக்கள் முன்னிலையில் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் அறிந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக கிண்ணையடி கிராமத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றினை அண்மித்த பிரதேசங்களில் இவ் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கை இடம்பெற்று வருவதுடன். இதனை தடுக்க எவரும் துணிந்து முன்வராத நிலைமை காணப்பட்டது.

இதனால் பிரதேசத்தில் கலாச்சார சீரழிவு, இளைஞர்கள் போதைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, வாழ்வாதாரம் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு விடயங்களால் பிரதேச மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர். அத்துடன் கசிப்பு விற்பனை நடவடிக்கை இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை கவனத்தில் கொண்டு அதனை முற்றகாக ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போது மேற்படி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மட்டும் இதனை ஒழிக்க முடியாத நிலை உள்ளதால் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மில்லர் விளையாட்டு கழகத்தின் தலைவர் வ.வன்னியசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதேவேளை இவ் நடவடிக்கையின்போது தனக்கோ அல்லது ஏனையோர்களுக்கோ ஏதும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றால் பொலிசார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
மட்டு கிரான் குளத்தில் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக் கூடம் திறந்து வைப்பு!

மட்டு கிரான் குளத்தில் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக் கூடம் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.