Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கிரான் குளத்தில் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக் கூடம் திறந்து வைப்பு!

மட்டு கிரான் குளத்தில் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக் கூடம் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை கடந்த 01.06.2023 அன்று தனது கெத் லேப் சேவையினை ஆரம்பித்தது 18 மாதங்கள் கடந்த நிலையில் 2000 நோயாளர்களுக்கு மேல இலவச இருதய சிகிச்சைகளை மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவூடனும், கல்முனை ஆதார வைத்தியசாலை வசதிகளையூம் பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது.

இங்கே முற்றுமுழுதாக இலசவ சேவையே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக இருதயமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு என்பன கடந்த 04.01.2025 அன்று இவ் வைத்தியசாலையின் நிறுவுனர் சற்குரு. மதுசூதனன் சாய் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நகழ்வில் கிரிக்கட் ஜாம்பவான்களான அரவிந்தடி சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்தவாஸ, அஜந்த மென்டிஸ் மற்றும் இவ் வைத்தியசாலையின் இலங்கை தலைமை அதிகாரி பென்னி ஜெயவர்த்தன, வைத்தியசாலை பணிப்பாளர் ரமேஸ் ராவ், இவ்வைத்தியசாலையின் பொது முகாமையாளர் டேவிட் சில்வஸ்டர், இவ் வைத்தியசாலையின் பணிப்பாளர்களான டீபால் விக்ரமசிங்க, சுதர்சனம் தர்மரெட்ணம் ,நிசாந்த இவர்களுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இரா. முரளீஸ்வரன், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் கு.சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சினி மற்றும் இவ் விழாவின் கதாநாயகர்களான இருதய வைத்திய நிபுணர்களான வினோதன் மற்றும் ரஜீவன் பிரான்சிஸ் அவர்களும் அவர்களது சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் இச் சேவையானது பெரும் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் சென்றே இச் சேவையினை மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு மேற்கொண்டு வந்திருந்தது. தற்போது எமது பிரதேசத்திலும் இச் சேவை காணப்படுவதனால் மிக வேகமாக எமது மக்களுக்கு சேவை வழங்க கூடியதாக உள்ளது.

இங்கே வைத்திய நிபுணர் வினோதன் கூறுகையில் “ முன்பு நாங்கள் மாதம் மாதம் குறிப்பிட்ட சிலரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பியே இதனை செய்து வந்தோம். தற்பொழுது இங்கே 18 மாதங்களுக்குள் நாங்கள் 2000 பேருக்கு மேல் இச்சேவையை திறன்பட செய்துள்ளோம். இதே போன்று 2000 பேரை மாதம் மாதம் கடந்த காலங்களை போல எந்த தடையும் இன்றி யாழ்ப்பாணம் அனுப்பி இதனை மேற்கொண்டிருந்தால் இந்த 2000 பேருக்கும் சிகிச்சையளிக்க 6 வருடங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கும்” என்று குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப்பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது பிரதேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. மற்றும் இவளவு பெறுமதிமக்க இயந்திரங்கள் வசதிகள் கட்டிடங்களை எமக்கு இலவசமாக வழங்கி வரும் சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

எதிர்வரும் நாட்களில் இலவச இருதய அறுவை சிகிச்சைகளும் இங்கே மேற்கொள்ளப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் இல்ல முழு இலங்கை மக்களுக்குமாக இலவச இருதய சிகிச்சை வைத்தியசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
ஸ்டார் லிங்க் இணைய சேவை பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி

ஸ்டார் லிங்க் இணைய சேவை பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.