Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களுக்கான சரியான இடவசதி இல்லாததன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு ஆண்களுக்கு ஒரு விடுதியும் (இலக்கம்2) பெண்களுக்கு ஒரு விடுதியும் (இலக்கம்1) காணப்படுகின்றது.

இந்த இரண்டு விடுதிகளிலும் சுமார் 60 பேர் வரையிலேயே தங்கி நின்று சிசிக்சைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் மருத்துவ விடுதிகளில் போதிய இடவசதி இல்லாத நிலையினால் நிலத்திலும், கட்டடங்களின் ஓரங்களிலும் நோயாளர்கள் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு மருத்துவ விடுதிகளும் தங்காலிக மருத்துவ விடுதிகளாகவே கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள மெத்தைகள் நோயாளர்களுக்கு போதாத நிலை காணப்படுகின்றது.

போருக்கு முன்னர் 110 மில்லியன் ரூபா நிதியில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ள போதும் நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ விடுதிகள் இரண்டு தற்காலிகமாகவே கட்டப்பட்ட நிலையில் இதுவரை மாற்று வழி எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதால் நோயாளர்கள் கட்டடத்தின் ஓரப்பகுதிகளில் நோயாளர்கள் படுத்து உறங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ விடுதிகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்த போதும் அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததாக இல்லை.

ஆனால் ஏனைய மருத்துவ சிகிச்சை மற்றும் ஏனைய வசதிகள் மாவட்ட மருத்துவனைக்கு சரியாக இருந்தும் நோயாளர்களுக்கான மருத்துவ விடுதி சரியாக இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் பல கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வரும் நோயளர்கள் பெரும் அவதியினை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ விடுதி தொடர்பில் வடமாகாண ஆளுனர் கவனத்தில் எடுத்து இனிவரும் காலங்களில் நிதந்தர மருத்துவ விடுதிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பது நோயாளர்களின் எதிர்பார்பும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு
செய்திகள்

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

August 10, 2026
மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு
செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

August 10, 2026
பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
செய்திகள்

பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

August 10, 2026
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!
செய்திகள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!

August 10, 2026
அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!
செய்திகள்

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

August 10, 2026
துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!

August 10, 2026
Next Post
துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு 20 ஆம் திகதி வரை கால அவகாசம்

துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு 20 ஆம் திகதி வரை கால அவகாசம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு