தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள 54ஆவது சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்கவுள்ளார்.
உலகளாவிய தொலைக்காட்சித் துறையின் முக்கிய விருது விழாவான இதில், விஜய் சேதுபதியின் பங்கேற்பு இந்தியத் திரையுலகிற்குக் கிடைத்துள்ள முக்கிய கௌரவமாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த விழாவில் விருது வழங்கும் முதல் இந்தியர் என்ற தகவல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு ஆஷ்கா கோராடியா, 2010ஆம் ஆண்டு சிமோன் சிங் மற்றும் 2012ஆம் ஆண்டு பிரேர்ணா வான்வரி ஆகிய இந்திய நடிகைகளும் சர்வதேச எம்மி விருது விழாவில் விருதுகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விஜய் சேதுபதியை சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்கும் முதல் இந்திய நடிகர் எனக் குறிப்பிடுவது தவறான தகவலாகும். இருப்பினும், இவ்விழாவில் அவரது பங்கேற்பு தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரமாக அமைந்துள்ளது.








