Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (07) குறித்த மீனவர் திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளனர்.

இதனால் அவரிடம் இருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் ஆறு வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

அன்று இரவு 10 மணியளவில் அசத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன. இப்பொழுது மீன்பிடி பருவகாலம். இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன், வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கின்றேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கின்றார். அதுபோல இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள்.

புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் எனக்கு இழப்பீடினை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
Next Post
திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு