யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தாயார் தனது மகனால் பாலியல்ரீதியில் சித்திரவதைப்பட்டு தொடை பகுதிகளில் கடிக்கப்பட்ட காயங்கள் மற்றும் கண்டல்களுக்காக சிகிச்சை பெற வந்த போதே இச் சம்பவம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனை உடனடியாக புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்ப வைத்தியர் முற்பட்ட போது தாயார் கும்பிட்டு மன்றாடி அவ்வாறு செய்ய வேண்டாம் என கூறிச் சென்றுள்ளாராம். வடமராட்சியில் பிரபல பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த சிறுவன் 15 வயதில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளான்.
அது தொடர்பாக பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந் நிலையில் வீட்டில் இருந்த சில நகைகள் காணாமல் போனமை தொடர்பாக ஆராய முற்பட்ட போதே சிறுவன் தாய் மற்றும் சகோதரியால் பிடிக்கப்பட்டுள்ளான். அதன் பின்னரே சிறுவன் போதைப்பொருள் வாங்க பணம் பெறுவதற்காக நகைகளை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக இது தொடர்பாக பொலிசாரிம் முறையிட தாயார் சென்ற போது சிறுவன் துாக்கில் தொங்கியுள்ளான். இதனை அவதானித்த சிறுவனின் சகோதரி கத்திக் குளறவே சிறுவனை அயலவர்கள் காப்பாற்றி வைத்தியசாலை கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னர் சிறுவனை எங்கும் செல்லாது வீட்டில் மறித்து வைத்த போது இரு தடவைகள் துாக்கில் தொங்க முற்பட்டும், தனது கைகள் மற்றும் உறுப்புக்களை கத்தியால் கீறி வன்முறை செய்ததால் கடும் அச்சமுற்ற தாய் சிறுவனுக்கு தேவைப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் கொடுத்து வந்துள்ளனர்.
சிறுவனின் தந்தை ஓரிரு வருடங்களுக்கு முன் கனடா சென்றுள்ளார். அதன் பின் போதைக்கு அடிமையான சிறுவன் தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் தங்கியிருந்த போது 20 வயதான சகோதரிக்கு இரவில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் தாயார் தனது மகளை தனது அக்கா வீட்டில் சென்று தங்குமாறு கூறி சிறுவனுடன் தனித்திருந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையிலேயே சிறுவன் போதைப் பொருளை உட்கொண்டு விட்டு இரவு நேரத்தில் தாயை கடுமையாகத் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளது தெரியவருகின்றது.
தனது மகன் உயிரோடு இருக்க வேண்டும் என நினைத்தே தான் நடைப் பிணம் போல் வாழ்வதாக குறித்த பெண் வைத்தியருக்கு தாயார் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுவன் பிளேட் மற்றும் கத்தி போன்றவற்றால் தனது உடலை தானே கீறி இரத்தம் வழிந்தோடும் போது எடுத்து தாயாருக்கு காட்டிய வீடியோக்களையும் தாயார் வைத்தியருக்கு காட்டியுள்ளார். போதைப் பொருள் கிடைக்க சில மணி நேரம் தாமதமானால் கூட மகன் தற்கொலை செய்ய முற்படுவதாகவும் தாயார் கூறியுள்ளார்.
சிறுவன் பாடசாலையில் சிறந்த விளையாட்டு வீரனாக இருந்ததாகவும், தமது பிரதேச இளவயது உதைபந்தாட்ட அணியில் சிறப்பாக விளையாடி வந்ததாகவும் இதன் போது ஏற்பட்ட தவறான நட்புக்கள் காரணமாகவே சிறுவன் போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும் தாயார் கூறியுள்ளார்.
தற்போதும் குறித்த சிறுவனுக்கு வடமராட்சியில் இன்னொரு பகுதியில் உள்ள இரு விளையாட்டு வீரர்களே போதைப் பொருளை வீட்டில் வந்து கொடுத்து காசு வாங்கிச் செல்வதாகவும் அதிர்ச்சித் தகவல்களை தாயார் வைத்தியரிடமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“பெற்றோரே அவதானமாக இருங்கள். போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் உங்கள் குழந்தைகள் தொடர்பாக நீங்கள் தொடக்கத்தில் ஒரு போதும் அறிய மாட்டீர்கள்…. பணத் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் உள்ள பெறுமதி வாய்ந்த பொருட்கள் அல்லது நகை, பணம் காணாமல் போகும். அத்துடன் போதைப் பொருளுக்கு அடிமையான உங்கள் பிள்ளை தனிமையை நாடி படிக்கின்றது போல் ஒரு அறைக்குள் இருப்பான்….. மிக மிக அவதானமாக இருங்கள்…”