Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result

அடாவடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் கைது

2 years ago
in செய்திகள்

தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி அடாவடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் நேற்றைய முன்தினம் (8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் (08) நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது நிதி கொடுக்க மறுத்தவர்களை ஜனாதிபதியின் ஒளிப்படத்தைக் காண்பித்து, அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்டபோது வர்த்தகர்களுக்கும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்து நிதியை சேகரித்துள்ளனர். ஆனாலும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.

நிதி கொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து சாவாய் என்றும், அனுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன் எனவும் அனுர ஆட்களைப் பற்றித் தெரியும்தானே எனவும் அச்சுறுத்தினர் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
மனுஷ நாணயக்காரவின் கைச்சாத்து சட்டவிரோதமானது; விஜித ஹேரத்

மனுஷ நாணயக்காரவின் கைச்சாத்து சட்டவிரோதமானது; விஜித ஹேரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு