Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

55 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கான சுமார் 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுகளை மோசடி செய்ததாகக் கூறப்படும் இரு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் ஹற்றன் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நோர்வுட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிய அதிகாரி என்றும், மற்றையவர் அதே பிரிவில் கடமையாற்றிய மற்றொரு பெண் அதிகாரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் சில, சந்தேகநபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட கணக்காய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

நோர்வுட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடும் இந்த மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில் மோசடி தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் மூன்று அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்களிலும் அஸ்வெசும மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் இதுபோன்ற முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.