Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் 10 ஆங்கில பாட வினாத்தாள்களில் ஏராளமான பிழைகள்; இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தரம் 10 ஆங்கில பாட வினாத்தாள்களில் ஏராளமான பிழைகள்; இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த ஆண்டு வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான தரம் 10 ஆங்கில பாட வினாத்தாள் ஏராளமான பிழைகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரித்துள்ளார்.

முதல் ஆங்கிலத் தாளின் கேள்வி எண் மூன்று (3) இன் கீழ், வரைபடம் இல்லாமல் படத்தின்படி பதில் அளிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டாவது தாளில் பதில் அளிக்க முடியாத நிலையில் மூன்று கேள்விகள் பிழையாக இருந்ததாகவும் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது வினாத்தாளின் கேள்வி 1 இன் படி வார்த்தைகளைக் கொடுக்காமல் வெற்றிடங்களை நிரப்பவும், அகராதிப் பக்கத்தைப் பார்த்து 18 வது கேள்விக்கு பதிலளிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், அகராதிப் பக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தவிசாளர் கூறியுள்ளார்.

இந்த வினாத்தாளில் உள்ள பல கேள்விகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தவணை பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளின் நகல் என்றும், பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இரண்டாவது வினாத்தாளில் உள்ள மூன்று தவறான கேள்விகளுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருபது மதிப்பெண்கள் வழங்குமாறு வடமேற்கு மாகாண பாடப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பிரிவின் (தரம் 10) கீழ் மட்டும் 47,000 வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் 100,000 ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கல்வியில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், வீண் விரய அதிகாரிகளுக்கு மாணவர்கள் பலியாகக் கூடாது என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
Next Post
பேருந்துகளில் அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல; ஜகத் மனுவர்ன

பேருந்துகளில் அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல; ஜகத் மனுவர்ன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு