Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

1 hour ago
in செய்திகள்

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80%க்குத் தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த இரு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வதன் மூலம் ஒருவரது ஆரோக்கியத்தில் பல தீவிர சிக்கல்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதன் மிகக் கொடூரமான விளைவு மாரடைப்பு ஏற்படுவதாகும் என வலியுறுத்தினார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இதய சிகிச்சை வளாகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (16) பிற்பகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80%க்குத் தொற்றா நோய்களே (NCDs) காரணமாக அமைகின்றன என்றும், இவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளன எனவும் குறிப்பிட்டார். இந்த இரு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு பல்வேறு ஆரோக்கியச் சிக்கல்களை ஏற்படுத்துவதே முக்கிய பிரச்சினை என்றார்.

இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பொறுத்தமட்டில், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50% மட்டுமே பயனுள்ள கட்டுப்பாட்டில் உள்ளனர் எனவும், நீரிழிவு நோயாளிகளில் 25% போன்ற சிறிய சதவீதத்தினர் மட்டுமே சரியான கட்டுப்பாட்டில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். இந்த இரு நோய்களினதும் மிக மோசமான சிக்கலாக மாரடைப்பு அமைவதே, இது சமூகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் நவீன வசதிகளை ஏற்படுத்துவதுடன், மக்கள் தொகை வடிவமைப்பு மற்றும் நோய் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப சுகாதார அமைப்பை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, சுகாதார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டத்தில் ஆரோக்கியா (Arogya), கொத்தணி அமைப்புகள் மற்றும் உயர்நிலை பராமரிப்பு நிறுவனங்கள் ஆகிய மூன்று முக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றை நாட்டின் சுகாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!
செய்திகள்

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
Next Post
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு