Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டைபறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்!

கட்டைபறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்!

2 years ago
in செய்திகள்

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்மைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்னவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (9) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் கட்டைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக இவ் இறால்ப் பாலம் அமைந்துள்ளது. வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமானதும் சுமார் 125 மீற்றர்கள் நீளமானதுமான இப்பாலமானது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கிறீற் குழாய்கள் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டதாகும்.

மூதூரிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் மிகப் பழமையானதும் அதிகளவு மக்களது பயன்பாட்டில் உள்ளதுமான பழைய மட்டக்களப்பு வீதியிலேயே இப்பாலம் அமைந்துள்ளது. சேருவில, தோப்பூர், பாட்டாளிபுரம், நல்லூர், மலைமுந்தல், பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் தினமும் இப்பாலம் ஊடாகவே அடிக்கடி மூதூருக்கும் ஏனைய பல பகுதிகளுக்குமான பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கட்டைப்பறிச்சான், சேனையூர், கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சந்தனவெட்டை, அறபாநகர், அம்மன்நகர், கணேசபுரம் ஆகிய இடங்களிலுள்ள நெல்வயல்கள், குளங்கள், சேனைப்பயிர்ச் செய்கை நிலங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளுக்குச் செல்லும் பாதையிலுள்ள மிக முக்கிய பாலமாகவும் கட்டைப்பறிச்சான், சேனையூர் பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கான பிரதான பாதையாகவும், மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 3000 திற்கும் அதிகமான மக்களது பயன்பாட்டிலுள்ள பொது மயானம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்குச் செல்லும் பிரதான வழியில் இப்பாலம் அமைந்துள்ளது.

இவ்வாறான மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இவ் இறால் பாலமானது, கடந்த 20 வருடங்களாக திருத்தப்படாது, மோசமாகப் பாதிப்படைந்த நிலையிலுள்ளது. இதனூடாகப் பயணிக்கும் மக்களது உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியளவுக்கு இப்பாலம் சிதைவடைந்த நிலையிலுள்ளது.

இப்பாலம் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் பாலத்திற்கு மேலாக சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு ஆற்றுநீர் மட்டம் உயர்ந்து பாய்கின்றது. இதனால் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதுடன், இதனூடாகப் பயணிக்கும் மாணவர்களது பாதுகாப்புக்கருதி அடிக்கடி பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது.

மேலும் கால்நடைகள் அதிகளவில் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளன. விவசாயம், வியாபாரம் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது. ஓட்டுமொத்த மூதூர் பிரதேச மக்களதும் பொருளாதாரம் கல்வி, விவசாயம், வர்த்தகம் மற்றும் அரச தொழில் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பாலத்தின் பயன்பாடு உள்ளது.

மேற்படி நிலைமைக்களைக் கருத்திற் கொண்டு இப்பாலத்தினை சிறந்த திட்டமிடலுடன் புனரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என அக்கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், இதன் பிரதிகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளருக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
தமிழ் தேசியத்தை பாதுகாக்க தமிழ் தரப்புகள் ஓரணியில் திரளாவிடின் கட்சிகளை கலைத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள்; இரா. துரைரெட்ணம்

தமிழ் தேசியத்தை பாதுகாக்க தமிழ் தரப்புகள் ஓரணியில் திரளாவிடின் கட்சிகளை கலைத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள்; இரா. துரைரெட்ணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.