அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோர்வேயைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அந்நாட்டிலிருந்து குடியேறுபவர்களை அமெரிக்காவுக்கு வரவேற்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஒக்டோபர் 25ஆம் திகதி மிச்சிகன் மாநிலத்தின் போர்ட் ஹியூரான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நோபல் அமைதிப் பரிசு தனக்கு வழங்கப்படாததைக் காரணமாகக் குறிப்பிட்ட அவர், நோர்வேயை அவமதிக்கும் வகையிலான கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மேலும், “எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதால் நோர்வேயிலிருந்து யாரும் வேண்டாம்” என்ற கருத்தையும் வெளியிட்டார்.
2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் உயர் ஆணையாளருமான நவி பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு குறித்து முன்னதாகவும் அதிருப்தி வெளியிட்டிருந்த ட்ரம்ப், பரிசு வழங்கும் முடிவை அவமானகரமானது என விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஈட், நோபல் அமைதிப் பரிசுக் குழு சுதந்திரமாகச் செயற்படுவதாகவும், அது நோர்வே அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், நோர்வே நாட்டவர்களுக்கு எதிராகப் புதிய குடியேற்றத் தடை அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகத் தகவல் இல்லை.








